டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 சட்டசபை தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் களம் இறங்கினர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 60% வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புப்படி, பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கப்பட்டது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்நிலையில் ‘மினி அரவிந்த் கெஜ்ரிவால்’ போல வேடம் அணிந்து வந்த சிறுவன், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான ராகுல் தோமர் தனது மகனுடன் வந்திருந்தார். அப்போது அவ்யன் நீல நிற ஸ்வெட்டருடன் வெள்ளை காலர் மற்றும் பச்சை நிற பஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார். அதோடு கெஜ்ரிவால் போலவே தோற்றமளிக்க அதே போன்று கண்ணாடியும் மற்றும் மீசையையும் வரைந்திருந்தார். குளிர் காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இதே போன்ற உடைகளை தான் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.