
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு ஓடி உள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பள்ளி மாணவர்கள் . மேலும் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும், சாலைகளை சரிவர பராமரிக்கவும் கோரி பொதுமக்கள் சாலையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.