தமிழக வனத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொன்முடியை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்.

ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படவில்லை. பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரை சந்தித்தார்.

அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.