உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதில் மந்திரியாக நிதின் அகர்வால் உள்ளார். இவருக்கு ருச்சி கோயில் என்ற சகோதரி இருக்கிறார். இந்நிலையில் இவரிடம் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவி ரீனா பாசி ஆகியோர் பிளாட் வாங்கி தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கோயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சுபாஷ் பாசி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். சுபாஷ் கடந்த 2012 முதல் 2017 ஆண்டு வரை சமாஜ்வாதி கட்சி சார்பில் சையத்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தற்போது அவர் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியில் இருக்கிறார்.