செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக  ஆட்சி காலத்தில் மழை பொய்யும் போதும் அங்க அங்க தேங்கி கிடந்தது. அவர்களும் நடவடிக்கை  எடுக்கவில்லை. DMK ஆட்சி காலத்திலும் அங்கு அங்கு தேங்கி கிடக்கு, இவுங்களும் எடுக்கல. இது வந்து எப்படி இருக்கு என்றால்,  இப்படித்தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஒரு தலைநகரில் 65 ஆண்டுகளாக மாறி மாறி இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்திருக்கிறது.

ஒரு மழை நீர் கழிவு நீர் வழிந்து ஓடுவதற்கு வாய்க்கால்கள் இல்லை, காவாய்கள் இல்லை என்பது மாதிரி கொடுமை எதுவுமே இல்லை. இன்றைய முதல்வர் அன்றைக்கு மேயராக இருக்கும் போது  என்ன நடந்தது ?  ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி இதற்காக ஒதுக்குவது எதனை ஆயிரம் கோடிகள்… என்ன பொறுப்பு இருக்கு ?

நீங்க விசாகப்பட்டினம் போய் பார்த்து இருக்கீங்களா ? திட்டமிட்ட நகரம். சாலை இருப்படி இருக்கணும். டிரைனேஜ் இப்படி இருக்கணும்.. கழிவுநீர் இப்படி இருக்கணும் என்று கட்டிருப்பார்கள். 60 ஆண்டுகளில் இந்த தலைநகரை கூட சரி பண்ணவில்லை என்றால்,  மற்ற ஊர்கள் எல்லாம்… மற்ற நகரங்கள் எல்லாம்……  முதன்மையைச் சாலையே  இப்படி சவக்குழி  மாதிரி இருந்தால்… உள் சாலைகள்…  எல்லாம் நாங்கள் எல்லாம் இங்கிருந்து அந்த பகுதிக்கு போய் திரும்பி  வருவதற்கும் என்ன பாடு படுகிறோம் என்று பாருங்கள் ? உங்களுக்கு அப்படி இல்லை…

நீங்கள் வீட்டை விட்டு கிளம்பினால்  மூணு மணி நேரத்திற்கு முன்னாடி சாலையை ஒழுங்கு படுத்தி விடுகிறார்கள். நூற்றுக்கணக்கான காவலர்கள் நின்று விடுகின்றார்கள்.  சரசரவென்று போய்விடுகிறீர்கள்.   மண்ணை,  மக்களை பேரன்பு கொண்டு காதலிக்கின்றவனிடம்  அதிகாரம் வரவேண்டும். எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவனிடம் அதிகாரம் இருக்கக்கூடாது. இதெல்லாம் மாற்றம் வேண்டும் என்று துடிப்பவனிடம் அதிகாரம் வர வேண்டும். அப்ப தான் இதெல்லாம் சரி ஆகும். இல்லையென்றால் எந்த காலத்திலும் இப்படி மிதந்துகிட்டு இருக்க வேண்டியதான் என தெரிவித்தார்.