
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி மீண்டும் மோடி, வேண்டும் மோடி. தமிழகத்திலே 40…. பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்… பாரத பிரதம நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி, இன்னைக்கு இந்திய திருநாடு….. ஜி-20 நாடுகளுக்கு தலைமை வகிப்பதோடு….
பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை அடைந்து…. இப்போது மூன்றாவது இடம்…. உலகின் வல்லரசாக, நல்லரசு உலக மக்களுக்கெல்லாம்…. எல்லா விதத்திலும் உதவி செய்யக்கூடிய ஒரு நாடாக இந்த நாடு உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால், விளையாட்டு துறையாக இருக்கலாம்….. அதே மாதிரி அனைத்து துறைகளிலும் இன்றைக்கு இந்த நாடு முன்னேறி இருக்கிறது என்று சொன்னால், நரேந்திர மோடியின் உடைய நல்லாட்சி தான் காரணம்.
நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்திலும் வரவேண்டும். எனவே 40 தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர்கள்….. பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு இந்து மக்கள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தையும், தேர்தல் பணிகளையும் செய்ய துவங்கி இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.