
செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்…. நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்…. அதிலே உலகத்திற்கு முன்னோடியாக நம்முடைய இஸ்ரோ இருக்கிறது என்று சொல்ல போனால்,
அது பாரத பிரதமரை தான் சாரும்… அதே போல வெளிநாடுகளுக்கு நம்முடைய ராணுவ தளவாடங்களை 65 நாடுகளுக்கு உற்பத்தி செய்து அனுப்புகிறோம் என்று சொன்னால், அது பாரதப் பிரதமரை சாரும், மோடி ஜீ-யை சாரும்… அதே போல 135 கோடி மக்களை வேக்சின் மூலமாக…. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வேக்சினை வைத்து…..
கோவிட்இல் இருந்து இந்திய மக்களை காப்பாற்றிய பெருமை நம்முடைய பாரத பிரதமரையே சாரும்… இந்தியா மிகப்பெரிய நாடு… மக்கள் தொகை கொண்ட நாடு…. மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கிலே ஒரு பகுதி மக்கள் மாண்டு விடுவார்கள் என்று சொன்னார்கள்… ஆனால் நம்முடைய மோடிஜி அவர்கள் இந்திய மக்களை வெற்றிகரமாக காப்பாற்றி காட்டினார்கள்.
மோடி அவர்கள் வேக்ஸின் கொடுத்தது இந்தியாவிற்கு மட்டுமல்ல….. 65 நாடுகளுக்கு இலவசமாக வேக்சினை கொடுத்து, உலக மக்களை காப்பாற்றிய இரட்சகராக அவர் மாறினார்கள். இந்தியா என்று சொன்னாலே கடந்த 50, 60 ஆண்டு காலமாக ஏழை நாடு…. பாதிக்கப்பட்ட நாடு…. பரிதாபமான நாடு என்ற நிலைமையை போக்கி, உலக வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கின்ற நாடாக மாற்றிய பெருமை பாரத பிரதமருக்கு சாரும் என தெரிவித்தார்.