பிரிக்ஸ் என்னும் அமைப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஆம் ஆண்டு உருவாக்கின. இதில் 2010-ல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024 எகிப்து எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அவையும் இதில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா சென்றுள்ள அவர் அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து இருவரும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்டனர்.

இதனையடுத்து புதினிடம் பேசிய மோடி ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் இரு தரபினனுடனும் தொடர்பில் இருப்பதால் அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். அதுவே எங்களது நிலைப்பாடு என்று கூறிய மோடி மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.