
மீண்டும் பிரதமராக மோடி வந்தால் கட்சிகள் இருக்காது. சர்வாதிகாரத்தை நோக்கி இந்த நாடு போகும். இனிதேர்தலே நடக்காது என்று திமுக சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா,
புளுகினிகள் சொல்றத பத்தி நாம ஏன் கவலைப்படணும் ? காரணம் என்னன்னா… 1975இல் சுப்ரீம் கோர்ட்டை முடக்கி, ஜஸ்டிஸ் கண்ணா போன்றவர்கள் ராஜினாமா பண்ணாங்க… பாராளுமன்றத்தை முடக்கி… தேர்தலை நிறுத்தி…. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் போட்ட ஜனநாயக விரோத தீய சக்திகள் பேசலாமா ?
காங்கிரஸ் இதெல்லாம் பேசலாமா ? நீங்க எல்லாம் எமர்ஜென்சி உடைய பிறப்பு இல்லையா ? 1975, 1976, 19 77 இல் ஜனநாயகத்தின் விரோதிகள், சர்வாதிகாரத்தின் எடுபிடிகள், காங்கிரஸ் கட்சி… இவங்க எல்லாம் பேசலாமா ? அதனால் இவர்களுக்கு தெரிந்தே பொய் சொல்லக்கூடிய புளுகுனி கூட்டம். அதனால் அவங்க சொல்ல தான் செய்வார்கள்…
உங்களுக்கு புரிவதற்காக சொல்றேன்… தமிழ்நாட்டில் இருந்து பெரிய அறிவாளி கொஞ்ச நாளைக்கு பினான்ஸ் மினிஸ்டரா இருந்தாரே… பா.சிதம்பரம் அவரு 2014 தேர்தல்ல என்ன சொன்னாரு ? மோடி அவர்கள் பிரதமரானால் 100 நாள் வேலை நின்னு போகும் சொன்னாரா ? இல்லையா ? இன்னைக்கு நின்னு போயிருக்கா ? நாங்க ஏற்கனவே நிரூபிச்சு காட்டியிருக்கின்றோம்… சிதம்பரமோ… .காங்கிரஸ்ஸோ எல்லா புளுகினி கூட்டம் என்று..
CAAயை எதை பொருத்தது, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இந்த மூணுமே அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகள். அந்த நாட்டுல இஸ்லாமியர் அல்லாதவர்கள், இந்துக்கள்…. கிறிஸ்தவர்கள்…. பார்சிக்கள் இவங்க எல்லாரும் மதம் மாற சொல்லி நிர்பந்தம் செய்து, கொடுமை செய்த காரணத்தினாலே…. அவங்க இப்ப வரதுக்கு இல்ல, இந்த இஷ்யூ ஏற்கனவே 2019இல் CAA சட்டம் கொண்டு வரும் போதே தெளிவா சொல்லி இருக்கு, 5ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டவர்கள். இப்போ எல்லாரையும் வாங்க… வாங்க என அழைக்கவில்லை.
ஆகவே 2014க்கு முன்னாடி இந்தியாவிற்கு வந்துவிட்ட, அங்கு மதரீதியாக துன்பப்படுத்தப்பட்டு, அதனால் இங்கு வந்தவர்களுக்கு… இங்கு இருக்கிறவர்களுக்கும் குடியுரிமை கொடுக்கிறோம்னு சொல்லி இருக்கு… இதனால யாருக்கு பாதிப்பு… அந்த சட்டத்தில் யாராவது ஒருத்தருக்கு குடியுரிமை எடுப்போம் என்று சொல்லி இருக்கா ? அதனால் நீங்க எல்லாரும் என்ன சொல்லணும்…. ஏய் புளுகுணி காங்கிரஸ்…. ஏய் புளுகுனி திமுகவே… இந்த மாதிரி முஸ்லிம்களை தூண்டி விடாதே… மற்றும் ஒரு 47க்கு வழி வகுக்காதே… தேச விரோதத்தில் ஈடுபடாதே…. அப்படின்னு நீங்க எல்லாரும் எழுதணும்னு உங்க கை கூப்பி கேட்டுக்குறேன் என தெரிவித்தார்.