சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகதர்ஷினி(19) ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நாகதர்ஷினி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடி உள்ளார். அப்போது ஒரு விளம்பரத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மொபட் விற்பனைக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த மொபட்டுடன் ராணுவ அதிகாரி போன்று சீருடையில் ஒருவர் நிற்பது போன்ற புகைப்படமும் இருந்தது. இதனால் நாக தர்ஷினி அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மறுமுனையில் பேசிய “நபர் நான் ராணுவத்தில் வேலை பார்க்கிறேன். பணி மாறுதல் காரணமாக டெல்லி சொல்ல இருப்பதால் மொபெட்டை விற்பனை செய்கிறேன். தற்போது நான் ராணுவத்தில் இருப்பதால் மொபட்டை நேரில் தர இயலாது. எனவே பார்சல் சர்வீசில் அனுப்புகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி மாணவி 20000 ரூபாய் வரை ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி அவர் மொபட்டை அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.