
புதுச்சேரியில் உள்ள மூலக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவர் இணையத்தின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு வழிகளை முயற்சித்துள்ளார். அப்போது இவருக்கு பங்குச்சந்தை நிறுவனர் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது.
அதில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதனை பயன்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.. அவரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி 4.35 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பணம் முதலீடு செய்து சில நாட்கள் ஆகியும் எந்த ஒரு லாபமும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதே உணர்ந்த சுவாமிநாதன் இணையப் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜ்குமார் என்பவர் தொலைபேசி whatsapp குரூப்பில் இணைந்து மர்ம நபர் கூறியபடி பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அவர் 6 லட்சம் முதலீடு செய்தும் திரும்ப எந்த ஒரு பணமும் அவரால் பெற முடியவில்லை. இது குறித்து ராஜ்குமார் காவல்துறையின் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.