கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய மர்ம நபர் கூறியதை நம்பி தினேஷ்குமார் 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.