மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண் பயணி மற்றும் உயிரினங்களை வாங்கிச் செல்ல வந்த சென்னையை சேர்ந்த ஒரு ஆண் என்பது தெரிய வந்தது.

பின்னர் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த உயிரினங்களில் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இருக்கும் அபாயம் இருப்பதால் அவற்றை மீண்டும் அந்த நாட்டிற்கே விமான மூலம் சுங்க அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.