இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கோல்ட் சேமிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். டிஜிட்டல் தங்கத்தை எப்படி சேமிப்பது மற்றும் அதன் பலன்கள் என்பதை குறித்து காணலாம். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கூகுள் பே, போன் பே போன்ற பல பண பரிவர்த்தனைகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலி மூலம் டிஜிட்டல் கோல்டு முதலீடு செய்யலாம். உதாரணமாக போன் பே வைத்திருந்தால் அதனுடைய முகப்பு பக்கத்தில் தங்கம் படம் போட்டிருக்கும்.

அதனை அழுத்தி உள்ளே சென்றால் தங்கம் வாங்கும் வசதி மற்றும் இன்றைய நாளுக்கான விலை தெரியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு நீங்கள் ரூ. 1 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சேமித்த தங்கத்தை நமக்கு தேவைப்படும் நேரத்தில் விற்றும் விடலாம் அல்லது பணத்தின் மதிப்புக்கு ஏற்ற வகையில் நகையை வாங்கிக் கொள்ளலாம். மேலும் தற்போது தங்கமயில் நகை கடையில் டிஜிட்டல் கோல்டு  சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.