
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ராங்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில், 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது 8 வயது மாற்றுத் திறனாளி மகன் நஸீர் மில்லியன் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
அதே நேரத்தில், அவரது 4 வயது மகள் ப்ராமிஸ் chocolate சாப்பிட்டு பல நாட்களாக வீட்டில் தனியாக உயிர்வாழ்ந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் ப்ராங்ஸின் ஈஸ்ட் 231வது வீதியில் உள்ள விக்ஃபீல்டு பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் இடம்பெற்றுள்ளது.
போலீசார் மற்றும் மருத்துவக் குழுவின் தொடக்க விசாரணையின்படி, லிசா காட்டன், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவரது மகன் நஸீர், உடல்நிலை காரணமாக பட்டினியால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நஸீர் ஒரு ஊட்ட சுழற்சி குழாய்மூலமே உணவு உட்கொண்டு வந்தார். பல வாரங்கள் கழித்து, வீட்டு உரிமையாளர், லிசா வீட்டை காலி செய்தது விட்டாரா? என சந்தேகத்துடன் அவரது தந்தை ஹ்யூபர்ட் காட்டனை தொடர்புகொண்டதால், இந்த சோக சம்பவம் வெளியானது.
அதன் பிறகு, லிசாவின் மூத்த மகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, நஸீர் இறந்த நிலையில் இருந்ததையும், ப்ராமிஸ் chocolate சாப்பிட்ட முகத்துடன் தாயின் படுக்கையில் உட்கார்ந்திருந்ததையும் கண்டுள்ளார். உடனே அவர் ப்ராமிஸை எடுத்துச் சென்று போலீசுக்கு தகவல் அளித்தார்.
911 அழைப்பின் பதிவில், நஸீரின் உடலில் பூச்சிகள் நகரும் காட்சியும் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியினர் பல வாரங்களாக வீடிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்திருந்தாலும், அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்யவில்லை.
லிசா காட்டனுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2021ல் குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்தலால், அவர் கைது செய்யப்பட்ட பின்னணியும் இருக்கிறது. குழந்தை நல பாதுகாப்புத் துறையான ACS-இன் கண்காணிப்பிலும் இவர் இருந்துள்ளார்.
தற்போது 4 வயது ப்ராமிஸ், அவரது தாத்தா ஹ்யூபர்ட் காட்டனின் பராமரிப்பில் உள்ளார். ” அண்டை வீட்டுக்காரர் ஒருவர், “அந்த சிறுமி இனிமேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நம்பிக்கை” என தெரிவித்துள்ளார். தற்போது NYPD இந்த சோக சம்பவத்துக்காக முழுமையான விசாரணையைத் தொடங்கிியுள்ளது.