மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நீதிமன்றத்தில் வழக்குக்காக மாமியார் யமுனா யஷ்வந்த் நிகம்(58). மற்றும் அவரது மருமகள் வந்துள்ளனர். இந்த வழக்குக்காக இரு குடும்பத்தினர் வந்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி மதியம் இரு குடும்பத்தினரும் வழக்குக்காக நாசிக் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தனர்.

அப்போது மாமியார் நிகம் மற்றும் மருமகளின் சகோதரர் தீபக்(37) ஆகியோரிடையே ஆரம்பத்தில் வாக்குவாதத்தில் ஆரம்பித்த சண்டை இறுதியில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் குடுமியைப் பிடித்துக் கொண்டு தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சில பெண் காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் அடித்து சண்டையிட்டு அருகில் உள்ள இரு சக்கர வாகனங்களின் மீது விழுந்துள்ளனர்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானது. ஆனால் இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இறுதியில் சர்க்கார் வாடா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு குடும்பத்தினரையும் அமைதிப்படுத்தி காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். மேலும் இரு குடும்பத்தினருக்கும் மெமோ வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் நீதிமன்ற வாயிலிலே நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.