
மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா கணவர் வேலைக்கு சென்று பின்பு தனது மகள் வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து வேலை முடிந்து திரும்பிய கணவர் வீட்டிற்குள் நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.