அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த நிலையத்தை அடைந்தார்.

ஆனால், அந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் தனது அடையாளப்பட்டியலில் 10 நிமிடங்களுக்குப் பிறகு $25 அபராதம் வசூலிக்கப்படும் என எழுதியிருந்ததாகவும், தாமதமாக வந்ததால் அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அந்த தாய் மறுப்புத் தெரிவித்ததால், ஹேர்ஸ்டைலிஸ்ட், முடி அலங்காரம் முடிந்தவுடன் சிறுமியின் ஜடைகளை வெட்டத் தொடங்கியுள்ளார்.

 

இதனைத் தடுக்க முயன்ற அந்த தாய் மற்றும் ஹேர்ஸ்டைலிஸ்ட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கைத்தகராறு ஏற்பட்ட நிலையில், ஹேர்ஸ்டைலிஸ்ட் கத்தியை எடுத்து, அந்த தாயின் கையை வெட்டியதாகவும், சம்பவத்தை சிறுமியின் பாட்டி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த அந்த தாய் 6 மாத கர்ப்பிணி என்றும், இந்த தாக்குதல் அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த கடும் வன்முறை சம்பவம் தொடர்பாக, குற்றம் செய்த ஹேர்ஸ்டைலிஸ்ட், சம்பந்தப்பட்ட அலங்கார நிலையத்தால் உடனடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு, வாடிக்கையாளர் உரிமைகள் மற்றும் ஹேர்ஸ்டைலிங் தொழில்நெறி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.