நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பிரபல நடிகர் யோகி பாபுவுக்கு தன்னுடைய பேட் ஒன்றினை ஆட்டோகிராப் போட்டு பரிசாக கொடுத்துள்ளார்.

இந்த பேட்டை வாங்கிய யோகி பாபு அதற்கு முத்தம் கொடுத்ததோடு எம்.எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் முன்னணி ஹீரோகளுடன் சேர்ந்து படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.