இந்திய கிரிக்கெட்டின் லெஜன்ட் தல தோனி. இவர் இந்தியாவுக்காக 3 விதமான போட்டிகளிலும் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். அதன் பிறகு புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்ட நிலையில் அந்த சீசனோடு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தோனி அப்படி அறிவிக்கவில்லை.

இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் மேஜர் மிஸ்ஸிங் என்று தோனியின் 7-ம் நபர் ஜெர்ஸ்ஸியை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தோனி ஓய்வை அறிவிப்பதை தான் மறைமுகமாக இப்படி சிஎஸ்கே அறிவித்துள்ளதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. மேலும் தோனியின் ஓய்வு குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.