மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக ஒரு வெயிட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 7 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காட்சிகளில், குற்றவாளி வெயிட்டரை காரில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவரின் பாக்கெட்டில் இருந்து ரூ.11,500 திருடப்பட்டு, அவர் மறுநாள் காலை விடுவிக்கப்படுவதற்கு முன்பு தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“>

 

இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.