தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போ.மல்லாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து வரி நிலுவைத் தொகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 8-வது வார்டு ரங்கநாதன் தெருவில் ரேகடஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வரி நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் பேரூராட்சி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு முன்பு குப்பைகளை கொட்டி நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே குப்பைகள் அகற்றப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.