
திருச்செந்தூரில் நடந்த கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குலசேகரப்பட்டினம் பைபாஸ் சாலையில் விளையாட்டு மைதானத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா என்ற இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடத்திய விசாரணையில், இளைஞர் கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுரேஷ் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, பிகாஸ் பிகிரா சுரேஷின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால், கோபத்தில் அந்த இளைஞரை கல்லால் அடித்து கொன்றதாக சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
சுரேஷின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை எதிர்த்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைத்துள்ளது.