இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பது இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரையிலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிப்பில் அதிகளவில் லித்தியம் பேட்டரி வெளிநாட்டிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது அது இந்தியாவிலேயே கிடைத்து இருப்பதால் லித்தியம் பேட்டரி நாட்டிலேயே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்திலும் எரிப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாகவும் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் படி அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் லித்தியம் பேட்டரி முக்கியமான பங்காற்றி வருகிறது. இந்நிலையில் நாட்டில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.