
கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சொல்லி கடந்த 1991ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இப்போது மதம், சாதி வாயிலாக சிலர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.க ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியடைய இன்றே களமிறங்குங்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடும் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனும் நம்பிக்கையுடன் இன்றே தேர்தல் பணியில் களமிறங்குங்கள். கடந்த முறை 39 தொகுதிகளில் வென்றோம். ஆனால் இந்த முறை மொத்தம் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். முதல்வர் ஆசையில் சில பேர் கட்சி துவங்கினார்கள். அடுத்த முதலமைச்சர் நான் தான் என சொல்லி கட்சித் துவங்கிய சில பேர் இப்போது அனாதையாக உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.