வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த சேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அவரது அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக் என்பவர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்தார். இந்த தகவல் பரவிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீட் கட்சியை தடை செய்யக்கோரி திடீரென போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவரது தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டை முற்றுகையிட்டனர். அதோடு முன்னாள் பிரதமரின் உருவ படத்தையும் சேதப்படுத்தினர். இதையடுத்து வீட்டில் ஒரு பக்கத்தை தீ வைத்து எரித்தனர். இதனால் ராணுவம் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக தனது தொண்டர்களுக்கு உருக்கமான செய்தியை ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அதில் அவர்கள் என் வீட்டை பார்த்து பயப்பட வேண்டும்?. கடந்த முறை இந்த வீட்டை தீ வைத்து எரித்தனர்.

தற்போது அதை அழிக்க பார்க்கிறார்கள். இந்த நாட்டுக்கு நான் எதுவும் செய்யவில்லையா? பிறகு ஏன் இப்படி அவமரியாதை செய்கிறார்கள். நானும் எனது அக்காவும் ஒன்றாக இருந்த நினைவுகள் அனைத்தும் அழிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று என் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வீட்டை வேண்டுமானால் நீங்கள் அளிக்கலாம், ஆனால் வரலாற்றை உங்களால் ஒருபோதும் அளிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.