
சென்னையில் தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக செல்லப் போகிறேன். அதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறினார் அதற்காக நேற்றிரவு இங்கிலாந்து கிளம்பியுள்ளார். அந்த சமயத்தில் அவர் அரசியல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே இருப்பேன்.
அதோடு ஆளும் கட்சிக்கு எதிரான சண்டை நடந்து கொண்டே இருக்கும். வெளிநாடு போனாலும் எனது மனது தமிழகத்தில் தான் இருக்கும் என்றும் கூறினார். அதோடு செய்தியாளர்களிடம் அவர் பல கேள்விகளை முன் வைத்தார். அது என்னவென்றால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய், ஸ்பெயின் சென்ற போது அளிக்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று கூறினார்.
அதோடு நான் 10 ஆண்டுகள் காவல்துறையில் இருந்திருக்கிறேன். 10 முதல் 15 ஆண்டுகள் விவசாயியாக இருந்திருக்கிறேன், மாணவனாக இருந்திருக்கிறேன் இந்த அனுபவம் போதாதா எனக்கு? என்று கேட்டுள்ளார். அத்துடன் 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால், 70 வயது பழனிசாமி பேசியது சரியா? இதற்கான விளக்கத்தை ஜெயக்குமார் கொடுக்க வேண்டும் என்றும், 70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தங்களை இளைஞர்கள் என எண்ணுகிறார்கள் என்றும் கூறினார்.
பிரதமரின் விருப்பம் இளைஞர்கள் வரவேண்டும் என்பது தானே அந்த வகையில் எனக்கு இருக்கும் அனுபவம் போதாதா? என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த உள்ளதாக கூறியுள்ளது. அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக அவர்கள் தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து இணையலாம். மேலும் கட்சி மேன்மேலும் வளர வேண்டும் என்றால் தனியாகத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.