
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா. அதன்பிறகு பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நீலிமா தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் ருத்ரன் படத்தில் நடிகை நீலிமா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை நீலிமா தனக்கு 20 வயது இருக்கும் போது இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். நடிகை நீலிமாவை விட அவருடைய கணவருக்கு 12 வயது அதிகம்.
இந்நிலையில் நடிகை நீலிமா ராணி youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கணவரை பார்த்து பலர் கேலி செய்வதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் அவரைப் பார்த்து தாத்தா எனக்கூறி கேலி செய்கிறார்களாம். தன்னுடைய கணவருக்கு முடிக்கு டை அடிப்பது பிடிக்காததால் அவர் இயற்கையாகவே இருக்கிறார் என்றும் நடிகை நீலிமா கூறியுள்ளார். மேலும் நடிகை நீலிமா ராணியின் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.