
டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது இருக்கையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சம்பவம் ஜனக்புரி வெஸ்ட் அருகே உள்ள ப்ளூ லைன் மெட்ரோ ரயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரயிலில் பயணித்த பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த நிலையில் இளைஞரிடம் இருக்கையை தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த இளைஞர் இடத்தை கொடுக்க மறுத்த நிலையில் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது “நீங்கள் தான் பெரியவர்கள் போல நடந்து கொள்ள வேண்டும்” என்று சுற்றி இருந்த பயணிகள் கேட்டதற்கு அந்த இளைஞர் கிண்டலாக பதிலளித்துள்ளார். இறுதியில் அவர் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததால் இருக்கையில் இருந்து எழுந்து அவரைப் பார்த்து ஒரு பெண் “உங்கள் வீடியோ வைரலாக போகிறது….ஒரு பயணிச்சீட்டில் உள்ள அனைவரையும் கஷ்டப்படுத்துகிறீர்கள்,கொஞ்சம் மரியாதையோடு நடந்துக்கோங்க..”என்று கண்டித்து கூறினார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
இந்த சம்பவத்தை அருகில் இருந்த மற்றொரு பெண் வீடியோவாக எடுத்த நிலையில் instagram-ல் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.