
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைப்பதாக இல்லை எனக் கூறினார். சீமான் நான் தனித்துப் போட்டியிடுகிறேன் என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நான் பிரபாகரன் மகன் எனக்கு தனியாக இலக்கு இருக்கிறது எனவும் என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவை நான் நிறைவேற்றுவேன் என்றும் கூறினார். இந்த பூமியை சொர்க்கமாக படைக்க ஆசைப்படுகிறேன் என்னுடன் வந்து சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள் இல்லை என்றால் விடுங்கள் என தெரிவித்தார்.
நான் எனது மக்களை முழுமையாக நம்புகிறேன் எனவே நான் தனித்துப் போட்டியிடுகிறேன் என கூறியுள்ளார்.