தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகன் பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தினால் இசக்கியம்மாள் மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 23-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.