
உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் கோரிவருவதாகக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிச்செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள வீடியோவில், “எங்கேயிருந்து நான் இந்த பணத்தை வாங்குவது? நான் உயிரோடே இருக்க விரும்புகிறேன், ஆனால் என்னிடம் வேறு வழியில்லை,” என உருக்கமாக கூறுகிறார். மேலும், மனைவி தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி, வாழ வழியில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.
இதனைத்தொடர்ந்து, ராகுல் விஷம் குடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, மிடியா மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் தன்னை அடித்தும், மனதளவில் சித்திரவதையும் மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் “ஆண்கள் வெளிப்படையாக பேச முடியாததால், அவர்களின் பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை” என கருத்து பதிவிட்டுள்ளனர். முசஃபர்நகர் போலீசார் தற்போது வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பதை அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வியாக உள்ளது.
⚠️Trigger Warning: Sensitive Media⚠️
यूपी : जिला मुजफ्फरनगर में राहुल ने वीडियो बनाकर जहर खा लिया।
राहुल ने कहा– पत्नी ज्योति और ससुरालवाले उसको झूठे केस में फंसाना चाह रहे हैं। 12 लाख रुपए मांगते हैं। पैसा कहां से लाऊं? मैं मरना नहीं चाहता, फिर भी मर रहा हूं। क्योंकि कोई… pic.twitter.com/igyp7HrqfW
— Sachin Gupta (@SachinGuptaUP) March 16, 2025