விஜய் சேதுபதியின் தொகுப்பில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 8-ம் சீசன் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மயில்சாமிக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், அவர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்ற பெயர் மக்களிடையே அவருக்கு உண்டு. இதன் காரணமாக அவரது மகன் அன்பு பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் நல்ஆதரவு பெறுவார் என நெட்டிசன்கள் கணித்துள்ளனர். இதே ஆதரவுடன் நன்றாக விளையாடும் பட்சத்தில் பிக் பாஸ் வீட்டில் அதிக நாள் தக்க வைக்கப்பட்டு வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.