
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் சூரி. இவர் இப்போது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் 31-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற சூரி சுவாரஸ்யமான தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “நான் விடுதலை படத்தில் நாயகனாக நடிப்பதை அறிந்ததும் நடிகர் ரஜினி எனக்கு வாழ்த்து சொன்னார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது ஆகும்” என்று அவர் கூறியிருக்கிறார். அதோடு வெற்றிமாறனின் விடுதலை படத்தை அடுத்து தற்போது வினோத் ராஜ், விக்ரம் சுகுமாரன், அமீர் உள்ளிட்ட 3 இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக கம்மிட்டாகி இருப்பதாக சூரி தெரிவித்திருக்கிறார்.
• After #ViduthalaiPart1 , I'm acting as a Hero in 3 more films..❤️🔥
– Kottukkaali
– One project in Vikram Sukumaran (Madhayaanai kootam) direction
– One Project in Ameer Direction• Superstar #Rajinikanth wished me after knowing that I'm acting as a Hero..👌
: Soori
— Laxmi Kanth (@iammoviebuff007) March 25, 2023