
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதோடு, அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறி இருக்கிறது. கூட்டணி கட்சியான பா.ஜ.க-வின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். எனினும் பா.ஜ.க இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக முறைப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் வாக்காளர்களிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.