சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் அமைந்து இருக்கும் ராம்நாத் ஷிவ்கெலா எனும் சிவன் கோவிலில் உயிருடன் உள்ள நண்டை காணிக்கையாக செலுத்தினால் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதாவது, வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறு காணிக்கை செலுத்தும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.