
அசீம்-நரேந்திர மோடியை ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் டைட்டிலை போட்டியாளர் அசீம் வென்றார். இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற மூன்றாம் இடத்தை சிவின் பெற்றார். போட்டியின் இறுதி வெற்றியாளர்களை அறிவித்ததில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது பற்றி சோசியல் மீடியா வாயிலாக தங்களின் கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர் ஒருவர் பிக்பாக்ஸ் வீட்டை இந்தியாவாக உருவகப்படுத்தி பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் அசீமை மோடி எனவும் விக்ரமனை ராகுல் காந்தி எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் வட மாநிலத்தவர்களின் வாக்குகள் அனைத்தும் அசீமிற்கு சென்றதாகவும் விஜய் டிவியை தேர்தல் ஆணையம் எனவும் அதானி அம்பானிகள் விளம்பரதாரர்கள் எனவும் கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் எனவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு கூற முடியாது என்பதால் முடிவு இறுதி வெற்றிக்கு அசீமுக்கு சாதமாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றார். இதற்கு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Real india for you now !! #BoycottVijayTV pic.twitter.com/pweZkmC6aR
— Harish sise (@harishsise1) January 23, 2023