
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய மகன்களின் பெயர்களை அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் தன்னுடைய மகன்களின் பெயர்களை விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் தங்களுடைய மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த குழந்தைகளின் பெயரில் இருக்கும் N என்ற வார்த்தை உலகின் சிறந்த தாய் நயன்தாரா என்பதை குறிக்கும் என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதனுடன் சூரிய ஒளியில் ஜொலிக்கும் தன்னுடைய மகன்களுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Dear friends ❤️
We have named our blessings , our babies like this ❤️#Uyir RudroNeel N Shivan
உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
உலக் தெய்விக் N சிவன்N stands for their best mother in the world #Nayanthara ❤️
Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f
— VigneshShivan (@VigneshShivN) April 3, 2023