டெல்லியில் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு நவ்தீப் சிங் என்ற மாணவர் எம். டி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸில் தங்கி மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்றவராவார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தந்தை தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை மகன் ஏற்கவில்லை என்றதும் அவரது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நண்பர்கள் நவ்தீப்பின் அறைக்கு சென்று அறையின் கதவை எவ்வளவு தட்டியும் திறக்கவில்லை. அதனால் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நவ்தீப் சிங் பிணமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்ட நண்பர்களும் அவரது பெற்றோர்களும் கதறி துடித்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .