
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அதிமுக மாநாடு ஒன்னும் புதுசில்ல. எப்போதுமே மாநாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் என்ன பண்ணுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கூத்துதான் இன்றைக்கும் பண்ணுகிறார்கள். இப்போ அவங்க கட்சிக்குள்ள நிறைய குழப்பம் இருக்கிறதுனால நீ பெரியவனா ? நான் பெருசா என்கின்ற போட்டி போட்டு பண்ற விஷயமாக தான் இந்த மாநாட்டை பார்க்கின்றேன்.
எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. எனவே மாநாட்டில் எடப்பாடி பேசியது குறித்து அவரது தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களுக்கு யார் நிரந்தர பொதுச் செயலாளர் யார் ? நிரந்தர தலைவர் என்பதை அவர்கள் தொண்டர்கள் சொல்ல வேண்டும். தேமுதிகவில் உள்ளவர்கள் மட்டும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை.பல கட்சியிலிருந்து எல்லோருமே சென்று கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை எடுத்துக் கொள்ளலாம். அதிமுகவிலிருந்து இருந்து திமுக சென்று, இன்று ஜெயிலுக்கு போயிருக்கிறார். அதனால் தேமுதிக மட்டும் குறை சொல்வது, குற்றம் சாட்டு வைப்பது சரி இல்லை. அரசியல் லாபத்துக்கும் வந்தவர்கள், வேறு கட்சியில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் கேப்டனின் விசுவாசத்துக்கு எங்க கூடத்தில் இருப்பவர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள் நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.
விஜயகாந்த் அவர்கள் விஜயகாந்த் அளவிற்கு விஜயகாந்தின் மனைவியோ அவரது மச்சினனோ செயல்படவில்லை என்று சொல்பவர்கள் காசு வாங்கிட்டு சொல்பவர்கள் அதனால யார் மீதும் குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் பொதுவாக வைக்க கூடாது. நான் கூட இருக்கின்ற போது அண்ணி, அண்ணி, தம்பி என்பார்கள். அதற்கு பிறகு நாங்க அன்னியன் மாதிரி தெரிவோம் அதுதான் நடக்கிறதும் இல்லை.
தேமுதிகவின் நிலைப்பாடு கேப்டன் உரிய நேரத்தில் அறிவிப்பு செய்வார். நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுத்த விதிவிலக்கல்ல. இந்தியா முழுவதும் நீட் தேர்வு இருக்கிறது இதை வந்து எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாமல் கரெக்டான விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் அதுக்கான முயற்சி எடுக்கும். நம்மைவிட பின்தங்கிய பல மாநிலங்கள் இருக்கு. அங்கெல்லாம் நீட் தேர்வு நடக்கு. எதுக்கு திமுக நீட் ரத்து பண்ணுறேன்னு சொன்னாங்க. அதனால ஸ்டுடென்ட் மேல பிரஷர் போகுது. இது தப்பு, அது என்ன நிலைப்பாடு ? அதை கரெக்ட்டாக சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை என தெரிவித்தார்.