நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியது. இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது. மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராக தேவையிருப்பின் புதிய வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.