
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த வருடம் ஷங்காய் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில்,”இரு நாட்டின் எல்லைப் பகுதியில் தீவிரவாதம் மற்றும் பிரிவினை விவாதங்களை முடிவுக்கு கொண்டு வராத வகையில், பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா ஈடுபட போவதில்லை. எல்லையில் ஏற்படும் தீவிரவாதத்தை இந்தியாவே சரி செய்து கொள்ளும்” என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் கூறியுள்ளார்.