
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே தொழில் இருவரும் செய்து வந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ நாளான அன்று சுரேஷ் தனது ஆடுகளை விற்பதற்காக விற்பனையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனை ஜோதிலட்சுமியின் கணவர் அருகே சென்று கவனித்துக் கொண்டிருந்தார். உடனே சுரேஷ் அவரை திட்டி அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை ஜோதிலட்சுமியிடம் சென்று அவரது கணவர் கூறியுள்ளார். உடனே ஜோதிலட்சுமி, சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி சுரேஷ், ஜோதிலட்சுமியை தாக்கி உள்ளார். ஜோதிலட்சுமி சுரேஷிடமிருந்து தப்பித்து தெருத்தெருவாக ஓடியுள்ளார். பின்னாடியே துரத்திக் கொண்டு சென்று சுரேஷ் தலையில் அடித்ததால் தெருவிலேயே பலத்த காயம் அடைந்து தெருவிலேயே இறந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதிலட்சுமி உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜோதிலட்சுமியை அடித்து கொலை செய்து விட்டு சுரேஷ் அருகில் உள்ள மது கடையில் மது அருந்தி கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.