சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிகவும் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை ஒருங்கிணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். இவரது இறப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. நேதாஜி ஆகஸ்ட் 18, 1945 தைவான் நாட்டில் விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், 1970 இல் ரஷ்யாவிற்கு சென்ற போது விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்த 1985 இல் இருந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் வலம் வருகின்றன.

இந்த நிலையில், நேதாஜியின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர் கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேதாஜி உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக தனது இணையதள பக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியதாகவும், அவர் மிகவும் தைரியமான போராட்ட குணம் நிறைந்த தலைவராக செயல்பட்டது குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் நேதாஜி படத்துடன் அவரது வாழ்நாள் ஜனவரி 23, 1897-ஆகஸ்ட் 18, 1945 என குறிப்பிட்டு இருந்தார்.

நேதாஜியின் இறந்த தேதி குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டது குறித்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ராகுல் காந்தியின் பதிவு குறித்து பாரதிய இந்து மகாசபை சார்பில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானி பூர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து இந்து மகாசபை மாநில தலைவர் சந்திர சூட் கோஸ்வாமி கூறியதாவது, ராகுல் காந்தியும் அவரது முன்னோர்களும் நேதாஜியின் நினைவுகளை இந்திய மக்களின் நினைவுகளில் இருந்து அளிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். எங்களைப் பொருத்தவரை நேதாஜியை பற்றிய தகவல்களை யாராவது பிரித்துக் கூறும் என்றால் எதிர்ப்பு தெரிவிப்போம் என கண்டனம் தெரிவித்திருந்தார்.