
Netflix நிறுவனத்தின் Co Founder மாத சந்தாவை தவறாமல் கட்டிவருவதாக தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களுக்கான OTT தளங்களில் டாப் பட்டியலில் இடம் வகித்து வரும் பிரபல netflix ott தளம் தொடர்ச்சியாக தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கான பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், மாதம் ரூபாய் 200 இல் மொபைல், டிவி என பல சாதனைகளில் கணக்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அற்புதமான யுத்தியை கையாண்டு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் netflix நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், வெற்றிகரமாக செயல்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக, அதனுடைய founder மற்றும் co founder ஆக இருப்பவர்கள் தங்களது மாத சந்தாவை தவறாமல் கட்டி வருகிறார்கள் எனது தான்.
இதன் மூலம் அவர்களது வாடிக்கையாளர்களில் ஒருவராக மாறி, தொழில் என்று வரும்போது அதில் சமரசம் காட்டாமல் மாத சந்தாவை கட்டி நேர்த்தியாக நிறுவனத்தை வளர்க்கிறோம் என அதனுடைய Co Founder marc renaldoph சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பதை ஒப்பீடு செய்தால் மாத சந்தா அவர்களுக்கு ஒன்றுமே இல்லை என பலரும் நெகட்டிவ்வான கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில்,
கோடிகளில் சம்பாதித்தாலும் தன்னுடைய சொந்தத் தொழிலில் இலவசமாக எதையும் பெறாமல் அதற்கான பணத்தை கட்டி நேர்த்தியான முறையில் தொழிலை வளர்த்தெடுப்பதன் மூலம் வரவு செலவுகளை சரியாக பராமரிக்கவும், தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊக்கப்படுத்தவும் இம்முறை உதவுவதாக அவருடைய ஆதரவாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.