
திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், நம்முடைய இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றுகின்ற மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாடு. வேற வேற நம்பிக்கைகள்…. மத நம்பிக்கைகள் இருந்தாலும் அது அவங்கவங்களுக்கு சொந்தமானதாக இருக்குமே தவிர,
மத்தவங்களுக்கு எதிராக இருக்காது. ஏனென்றால் எல்லா மதமும் அன்பை மட்டும் தான் வலியுறுத்தி சொல்லுது. எந்த மதமும் வேறுபாட்டை போதித்தது இல்லை. அதனால் தான் கழக சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெறுகின்ற இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள்.
பேராயர் உட்பட இந்த மேடையை பாருங்கள்….. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பால சுவாமிகள், மேனாள் நீதியரசர் பாஷா அவர்கள்…. நாம் எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாக இருக்கிறோம். இந்த ஒற்றுமை உருவாக இன்றைக்கு நாம் கூடியிருக்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமை உருவாகிறதை சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துபவர்களால் மத ஒற்றுமையும் – மத நல்லிணக்கத்தையும் ஏத்துக்க முடியல. அதனால் தான் இந்த ஒற்றுமை ஏற்படுத்த பாடுபடுகின்றதிராவிட முன்னேற்றக் கழகத்தை வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கல. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவு மக்களும் அமைதியா நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியா தவிக்குது. ஆனால் உண்மை என்னன்னா….. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அந்த கூட்டத்தால இந்த மண்ணுல நிச்சயமாக வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.