திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சமயத்திற்கு விரைந்து சென்ற மேலப்பாளையம் காவல்துறையினர் அப்பகுதியை பார்வையிட்டபோது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிசுவின் உடலை மீட்டு  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாய் யார், கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.