
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும் கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக புதிய கட்சிகள் வந்து சேருவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர, எங்கள் கூட்டணியில் இருந்து ஒரு கட்சியும் வெளியே செல்லாது…
தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும்… இந்தியா கூட்டணி.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட்டணி 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது எந்த கட்சி என்று என்னால் தனியாக சொல்ல முடியாது. ஆனால் இன்னைக்கு உள்ளே இருக்கிற கட்சிகள் ஏதும் வெளியே போகாது. புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு.
தெளிவா சொல்லிட்டேன்….. என்னுடைய நிலைப்பாடு இதுதான்…. சராசரி காங்கிரஸ் கட்சியினுடைய தொண்டனுடைய நிலைப்பாடு இதுதான்…. திரு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை ஹீரோவாக காட்டி அவர்களை கொண்டாடுவது எங்களால் எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார் .