புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய காடுகளை வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்க இருக்கிறது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த குடும்ப அட்டையின் மூலமாக மக்கள் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைகின்றனர்.

அதோடு அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் குடும்ப அட்டை அவசியமாக கருதப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டுகளை வழங்கும் பணி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.