
செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி, சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், இப்ப வரதே இல்ல… சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும் அவரை பற்றி பேசுவதை விட்டுட்டேன். என்ன பொறுத்த வரைக்கும் சி. வி சண்முகத்துக்கும், எடப்பாடிக்கும் சரியா வரமாட்டேங்குது.
சி.வி சண்முகம் முன்னாள் அமைச்சரை சொல்றேன்…. எடப்பாடிக்கு எடுத்து சொல்றதுக்கு ஆள் கிடையாது. புரிஞ்சுக்கிற அளவுக்கு தன்மை கிடையாது … மீன் வள பல்கலைக்கழக மசோதாவை பாஸ் பண்ண சபாநாயகர் சொல்லும் போது… அம்மா பெயரை வைத்த மீன் வள பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் பெண்டிங் வெச்சிட்டார்.
ஆகவே அதை நாங்கள் திரும்ப நிறைவேற்றுகிறோம் என்று கொண்டு வருகிறார். கொண்டு வரப்ப உள்ள இருந்து ஆதரிக்கணுமா ? இல்லையா ? குரல் வாக்கெடுப்பு…. அதை நடத்தும் பொழுது… என் அண்ணன் ஓபிஎஸ், முன்னாள் முதல்வர்…. கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்… உள்ளே இருக்கிறார், அதுதான் முக்கியம் என்று உட்கார்ந்திருக்கிறார்… ஆதரிக்கிறார்.
ஆனால் எடப்பாடி எழுந்திருச்சு வெளியில் போறாரு… அதை பத்தி அவருக்கு கவலையே இல்லை. ஆகவே இந்த தமிழ்நாடு அரசுக்கு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்…. நிச்சயமாக உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும். அம்மா பெயரிலே மீன்வளப் பல்கலைக்கழகம் என்ற பெயரை சூட்டுகின்ற காட்சியை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அது நடக்கும். ஏனென்றால் அவங்க நினைச்சிருந்தா எப்பயோ மாத்தி இருக்கலாம்.
ஆனால் அவுங்க அதை பண்ணல…. வெளியிலே வந்து திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் மிகத் தெளிவாக…. அந்த சட்ட திட்டங்களை சொல்லும் பொழுது…. அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அதன் மேல் அக்கறை இல்லாமல் யாருக்கோ பயந்துகிட்டு, வெளியில் போய் பழனிசாமி பேசிட்டு போறாருன்னு சொல்றது தான் உண்மை.
இப்படி ஒரு ஆளுநர் கிட்ட பில் பெண்டிங் இருக்கிறதே, பழனிசாமிக்கு, அந்த கூட்டத்துக்கும் தெரியாது. அம்மாவையே மறந்த இவுங்களுக்கு இது எப்படி தெரியும் ? தெரியவே தெரியாது… மீண்டும் எழுவோம்… அரசியல் வானில் எங்கள் தலைவனுடைய ஓபிஎஸ் அம்மாவின் உடைய ஆட்சி மலரும் என தெரிவித்தார்.